கன்னித்தமிழ் (Kanni Tamizh):
தமிழ் மிக மிகப் பழமையானது. எத்தனையோ பழந்தமிழ் நூல்கள் இப்போது நமக்குக் கிடைக்காவிட்டாலும், கிடைக்கும் நூல்களைக் கொண்டு தமிழின் பழமையை ஒருவாறு உணர முடிகிறது. வரையறையாகக் காலத்தைத் தெரிந்து சொல்ல உறுதியான ஆதாரங்கள் தெளிவாக இல்லை. அதனால் பழைய தமிழ் நூல்களின் காலம் இன்னதுதான் என்று திட்டமாகச் சொல்ல முடியவில்லை. கிடைக்கும் பழைய நூல்களுள் தொல்காப்பியம் மிகப் பழையதென்று பலரும் கருதுகிறார்கள். அது தோற்றிய காலம் இன்னதென்று நிறுவும் வகை தெரியாமல் ஆராய்ச்சிக்காரர்கள் திண்டாடுகிறார்கள். குத்து மதிப்பாக மூவாயிர வருஷங்களுக்கு முந்தியது, ஐயாயிரம் வருஷங்களுக்கு முந்தியது என்று சிலர் கூறுகிறார்கள். இன்னும் சிலர் சில சொற்களை வைத்துக்கொண்டு தொல்காப்பியர் அவ்வளவு பழமையானவரல்ல என்று சொல்கிறார்கள். தொல்காப்பியத்தின் பண்ணமைந்த கட்டுக் கோப்பையும் அதன்பால் உள்ள செய்திகளையும் பார்த்தால் அதற்கு முன் பல நூல்கள் தமிழில் இருந்திருக்கவேண்டும் என்று நிச்சயமாகக் கூறலாம். பல நூல்கள் - இலக்கியங்களும் இலக்கணங்களும் - வெளிவந்த பிறகே அத்தகைய அமைப்பையுடைய இலக்கணம் பிறக்க முடியும்.
ஆசிரியர் குறிப்பு: கி.வா. ஜகந்நாதன் என்றழைக்கப்பட்ட கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர்[1]. இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது.
உள்ளடக்கம்:
முன்னுரை
1. தமிழ் இலக்கியச் சாலை
2. பெயர் வைத்தவர் யார்?
3. அகத்தியர் தொடங்கிய சங்கம்
4. தலைச் சங்கம்
5. கபாடபுரம்
6. கடைச்சங்கம்
7. அகத்தியம்
8. கன்னித் தமிழ்
9. தொல்காப்பியம் உருவானகதை
10. அழகின் வகை
11. இலக்கணமும் சரித்திரமும்
12. பழந்தமிழர் ஓவியம்
13. ஓவிய வித்தகர்
14. கலை இன்பம்
15. கலையும் கலைஞனும்
16. வாத்தியார் ஐயா 8
17. பொழுதும் போதும்
18. எப்படி அளப்பது?
19. ஒருதாய்க்கு ஒரு பிள்ளை
20. மழை வேண்டாம்
21. மோதிய கண்
22. புன்னையின் கதை
23. செவிலி கண்ட காட்சி
24. கம்பர் முகந்தது
25. ஔவையார் என்னும் பண்புருவம்
26. எங்கள் பாவம்!
27. உழவர் மொழி
Developer:
Bharani Multimedia Solutions
Chennai – 600 014.
Email: bharanimultimedia@gmail.com
Keywords: Kanni Tamil, Tamil Literature, Tamil Language, Tamil Culture, Tamil Nadu, Tamilnadu, Tamil Tradition, Ki.Va. Jaganathan, Ki.Va. Ja., Tamil Thai, Tamil Mother